காட்டுக்குள் அரங்கேறும் யுத்தம்... இணையத்தில் வைரலாகும் ட்ராகனின் சண்டைக் காட்சி!

Report
475Shares

இந்தோனேசிய நாட்டில் உள்ள வனப்பகுதி ஒன்றில் தங்களில் யார் பெரியவன் என்பதை நிரூபிப்பதுபோல் 4 கொமேடோ டிராகன்கள் மார்போடு மார்பு முட்டி மல்யுத்த சண்டையில் ஈடுபட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேஷியவில் உள்ள தீவுகளில் மட்டுமே காணக்கூடிய, உலகின் மிகப்பெரிய பல்லி இனமாக கருதப்படுகிறது இந்த கொமேடோ டிராகன். சுமார் 10 அடி நீளமும் 80 கிலோ வரை எடையும் கொண்ட கொமேடோ ட்ராகனின் எச்சில் கடும் விஷத்தன்மை கொண்டது.

இந்நிலையில், இந்த கொமேடோ டிராகன்கள் பராமரிக்கப்பட்டு வரும் தேசியப் பூங்காவிற்கு வனத்துறை ஊழியர் தனது அன்றாட வேலைக்காக சென்றுள்ளார். அப்போது, தங்களில் யார் பெரியவன் என்பதை நிருபிக்கும் விதமாக இந்த ட்ராகன்கள் வாலை தரையில் ஊன்றி எழும்பி நின்று சண்டை போட்டுள்ளது.

இதனை பார்த்த அந்த ஊழியர் ட்ராகன்கள் சண்டை போடுவதை வீடியோ எடுத்துள்ளார். மேலும், இந்த ட்ராகன்கள் இதுபோன்று அடிக்கடி சண்டையிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

20311 total views
loading...