அந்த கிரேன் மட்டும் என் மீது விழுந்திருந்தால்!... ஷங்கரின் உருக்கமான பதிவு

Report
398Shares

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் நொடிப்பொழுதில் உயிர் பிழைத்தனர்.

வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பொலிசார் நடத்தி வரும் நிலையில், ஷங்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், பெரும் வலியோடு இதை எழுதுகிறேன். அந்த சம்பவத்தில் இருந்து நான் பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன், என்னுடைய உதவி இயக்குநரையும் குழுவினரையும் இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

கிரேன் விழுத்ததில் இருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறேன். அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

11641 total views
loading...