குக்கூ வித் கோமாளி பாலாவுக்கு வனிதாவால் அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
738Shares

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பாலாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்க பிக் பாஸ் புகழ் வனிதா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

இது குறித்து அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

இப்போ நான் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். பஞ்சாயத்து பரமேஸ்வரி போல் கதாபாத்திரம் என்று சொல்லலாம்.

இந்த படத்துல புல்லட் ஓட்டும் மாதிரி ஒரு காட்சி புல்லட் எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது. அதனால இப்போ தான் கற்று கொண்டு இருக்கேன். இந்த படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

என்னுடைய கதாபாத்திரமும் அவர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய இயக்குனர் ரொம்ப நேர்மையானவர். அவர் கிட்ட நான் பர்சனலாக ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டேன்.

அது என்னனா, நிறைய திறமை இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். பிறகு ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி’ என்ற படத்தில் தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா வேணும் என்று இயக்குனரிடம் கேட்டேன். பின்னர் அவரும் ஒத்துக் கொண்டார்.

பாலாவை இந்த படத்தில் நடிக்க வெச்சிருக்கேன். இனிமேல் பாலாவை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று கூறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் வைரலானதில் ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.

31261 total views
loading...