எப்போ அம்மாவாக போறீங்க?.. டேட்டிங் அவரோடு எப்போ?.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி

Report
4071Shares

விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என கேட்டுள்ளார்.

அதற்கு DD அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான். ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர் எப்போது அம்மாவாக போகிறீர்கள் என கேட்க.. குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் அன்னை தெரசா இல்லையா என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா என கேட்க, ஆம், விவகாரத்து ஆகி நான்கு வருடங்கள் ஆகி விட்டன எனவும் பதிலளித்துள்ளார்.

104024 total views
loading...