குடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி!

Report
1039Shares

குடிபோதையில் நபர் ஒருவர் தூங்கி்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று அவரின் பேண்ட்டுக்குள் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பைரோ தேரா பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு அருகில் குடிபோதையில் தன்னை அறியாமல் படுத்துகிடந்துள்ளார்.

அப்போது, புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று முகேஷ் பேண்டுக்குள் நுழைந்ததுள்ளது. இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவரது பேண்ட்டுக்குள் இருந்து பாம்பை வெளியே எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர். முதலில் வெளியே வருவதுபோல் வந்த பாம்பு மீண்டும் அவரது பேண்ட்டுக்குள் சென்றுவிட்டது.

இதனையடுத்து நீண்ட முயற்சிக்கு பின்னர் முகேஷின் பேண்ட்டுக்குள் இருந்த பாம்பை அவர்கள் வெளியே எடுத்தனர். உடனே அருகில் உள்ள புதரில் பாம்பு சென்று மறைந்தது. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.

28263 total views
loading...