பிரபல நடிகையிடம் ஏமாற்றி எடுக்கப்பட்ட லிப்-லாக் முத்தம்... 34 ஆண்டுகளுக்கு பின்பு சர்ச்சையில் சிக்கிய கமல்

Report
563Shares

‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் முத்தக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து நடிகை ரேகா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா உள்ளிட்டோரின் நடிப்பில் 1986-ம் ஆண்டு வெளியான படம் புன்னகை மன்னன். அந்தப் படத்தில் இடம்பெற்ற என்ன சத்தம் இந்த நேரம் பாடல் இன்று வரை பலரின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளது.

அந்தப் பாடலில் சில முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். கதையின் படி காதலர்களாக நடித்திருந்த கமல்ஹாசன் - ரேகா இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலையில் இருந்து கீழே குதிக்கும் நேரத்தில் ரேகாவின் உதட்டில் முத்தமிடுவார் கமல்ஹாசன்.

முன்பு ஒரு பேட்டியில் கூறுகையில், அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, தற்கொலை செய்து கொள்ளும் போது கண்ணை திறந்திருப்பாயா என்று பாலச்சந்தர் என்னிடம் கேட்டார். கமல்ஹாசனைப் பார்த்து நான் சொன்னது ஞாபகமிருக்கிறதா என்று பாலச்சந்தர் கேட்டார். நான் கண்ணை மூடி கீழே குதிப்பதற்கு முன் கமல் எனக்கு முத்தமிடுவார். என் அப்பா இதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று கூறினேன். படத்தில் பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா, முத்தக் காட்சி ஆபாசமாக இருக்காது என்றார். ஆனாலும் என் அம்மாவிடம் நான் கூறும்போது என்னை ஏமாற்றி முத்தக் காட்சி எடுத்துவிட்டதாகக் கூறினேன். இந்த முத்தக் காட்சி குறித்து நிறைய பேட்டி கொடுத்திருக்கிறேன். அதனால் இயக்குநர் பாலச்சந்தர், கமல்ஹாசனுக்கு என் மேல் கோபம் இருக்கலாம். ஆனால் என்னிடம் சொல்லாமல் அந்த முத்தக் காட்சியை எடுத்தது உண்மைதான். அதை சொல்லித்தானே ஆக வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அந்தப் பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. அதைப்பற்றி கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், கமல்ஹாசன், பாலச்சந்தர் ஆகியோர் செய்தது தவறு என்றும், படத்துக்கு தேவைப்பட்டாலும், நடிகையின் அனுமதியின்றி அவருக்கு முத்தமிடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பிரபல ஊடகத்துக்கு விளக்கமளித்திருக்கும் ரேகா, 'இது நடந்து பல வருடங்களாகிவிட்டாலும் அதுதொடர்பான கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அந்தக் காட்சி எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். அந்தக் காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தால் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். அது அவசரமாக எடுக்கப்பட்ட காட்சி. அது முடிந்துவிட்டது. அதை நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அந்தக் காட்சிக்கு பின்னர் இனி கவனமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

23707 total views
loading...