சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய தர்ஷன்! சாண்டிக்கு குவியும் பாராட்டுக்கள்

Report
1903Shares

பிக் பாஸ் சாண்டியின் நீண்ட நாள் கனவு நேற்று நிறைவேறியுள்ளது.

சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றினை சாண்டி ஆரம்பித்துள்ளார். சாண்டியின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவுக்கு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது, இலங்கை தர்ஷன் ஊடகவியளாலர்களிடம் பேசியுள்ளார்.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிக நெருக்கமாக இருக்கும் போட்டியாளர் சாண்டி தான். அவருடைய இந்த ஆரம்பம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, எனது படப்பிடிப்பு வேலைகளும் அடுத்த இரண்டு வாராங்களில் ஆரம்பமாகவுள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், முதல் படமே இவ்வளவு பெரிய படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது வெற்றியை நோக்கிய முதல் கட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

69349 total views
loading...