ஊரைவிட்டு ஒதுக்கிய மக்கள்.. புதிய காதலருடன் சேர்ந்து சுகந்தி கொலை ப்ளான்.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு..!

Report
320Shares

தேனி மாவட்டம் கொடுவில்லார் பட்டி அடுத்த நாகலாபுரத்தை சேர்ந்தவர் டிக் டாக் சுகந்தி. இவர் டிக் டாக்கில் போட்ட ஆட்டத்திற்கு மயங்கி பலரும் அவரை பின் தொடர நாளுக்கு நாள் ஆண் நண்பர்களின் தொடர்பு சுகந்திக்கு அதிகமாகியுள்ளது.

இவரின் நடவடிக்கை ஊருக்கு அவபெயரை கொடுத்ததால், கொதித்தொழுந்த ஊர் பொதுமக்கள் சுகந்தி மற்றும் அவரது சகோதரியை ஊரினை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதன்பின்னர் தன்னை ஊரை விட்டு விரட்ட காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களுக்கும் சுகந்திக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாகவும், இதனை அடுத்து தனது புதிய ஆண் நண்பர்களுடன் இணைந்து கூலிப்படை மூலம் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிக்டாக்கில் வெளியான ஆடியோ உரையாடல் ஒன்றின்மூலம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொழுதுபோக்கு என்பதையும் மீறி தற்போது ஆபாசம் மற்றும் குற்றச்செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் டிக்டாக் செயலியை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

11074 total views
loading...