தலையில் அடித்தபடியே கதறிய ஷங்கர்!... நேரில் பார்த்தவரின் திக் திக் நிமிடங்கள்

Report
3499Shares

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த தொழில்நுட்ப கலைஞர் கூறுகையில், கிரேனிலிருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருந்ததாகவும், லைட்டிங் செட் பண்ணுவதால் அப்படி இருக்கலாம் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது திடீரென பாரிய சத்தத்துடன் கிரேன் இடிந்து விழுந்த போது, தலையில் அடித்துக் கொண்டே கதறியபடி சங்கர் ஓடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரும் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டதால் மிகப்பெரிய விபரீதம் தடுக்கப்பட்டு விட்டதாகவும், ஒருவேளை படப்பிடிப்பு நடந்த சமயம் என்றால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது எனவும் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

105385 total views
loading...