இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா?

Report
1027Shares

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது நேற்று கிரேன் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவரான கிருஷ்ணா என்பவர் என்றும், இவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் என்பவரின் மருமகன் என்று தெரியவந்துள்ளது.

மதன் அவர்களின் இளைய மகள் அமிர்தா என்பவரின் கணவர்தான் கிருஷ்ணா என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகனும் இந்தியன் 2 விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஷங்கர் அந்த இடத்தில் தான் இருந்ததாகவும் கலை இயக்குனர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

41435 total views
loading...