குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா! குவியும் லைக்ஸ்

Report
584Shares

அறந்தாங்கி நிஷா அவரின் அழகிய குழந்தையின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க பின்னர் யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

சமீபத்தில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் தூங்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ சஃபா எங்க அம்மா மாதிரி இருக்கா. நானும் அதான் ஆசைப்பட்டேன். அவ எங்க அம்மா மாதிரியே தூங்குராபா 47 நாளில் எங்க அம்மாவா மாறிட்டா நன்றி கடவுளே’என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


loading...