நடிகர் கஞ்சா கறுப்பு வாழ்வில் விளையாடிய நபர்... டாக்டர் பெண்ணை திருமணம் செய்தது ஏன்? பல உண்மைகள் இதோ

Report
1597Shares

தமிழில் பிதா மகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கஞ்சா கறுப்பு. இவரது கொமடிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் படங்கள் இன்றி காணப்படும் இவரது முகம் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவதானித்ததே.

பிக்பாஸ் சீசன் 1ல் பரணியுடன் கோபம் கொண்டதால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து மிக விரைவில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

தற்போது கஞ்சா கறுப்பு மனைவி இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ரகசியங்களை கூறியுள்ளார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த கஞ்சா கறுப்பிற்கு தனது ஊரில் மற்ற பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு பள்ளியைக் கட்டிக்கொடுத்தார்.

அவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்ததால், திருமணம் செய்தால் மருத்துவராக இருக்கும் பெண்ணையே திருமணம் முடிப்பேன் என்று கடைசியில் அவ்வாறும் செய்தார்.

இவ்வாறு நல்லபடியாக நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பின்பு சூறாவளி போன்று நபர் ஒருவரால் புயல் வீச ஆரம்பித்துள்ளது. தங்களது வாழ்க்கையில் படம் தயாரிப்பதாக விளையாட ஆரம்பித்து, இறுதியில் நஷ்டத்தில் விழுந்து, அதிலிருந்து மீண்டு வருவதற்கே சில காலங்கள் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

சில வருடங்கள் நடிக்காமலும், தங்களை யாரும் வந்து விசாரிக்கக்கூட வரவில்லை என்றும் தற்போது நடிப்பதற்கு ஆரம்பித்துவிட்டதால் இனி நிம்மதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் அப்பாஸ் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார் தெரியுமா?

62379 total views
loading...