அடுத்தடுத்து வெற்றிகளை ருசித்த பிரபல நடிகை விபத்தில் காலினை இழந்த அதிர்ச்சி! நொடியில் திசை மாறிய வாழ்க்கை! கடும் வியப்பில் ரசிகர்கள்

Report
810Shares

சின்னத் திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்த பிரபல நடிகை சுதா சந்திரனின் வாழ்க்கையில் நாம் கற்று கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது.

இவர் ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இன்றும் நடன நிகழ்ச்சிகளில் நடுவர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எனினும், வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகளை ருசி கண்டவர் என மேம்போக்காக அவரது வாழ்க்கையைப் பார்த்தால் அது தவறு.

தான் சந்தித்த சோதனைகளை சாதனையாக்க அரும்பாடுபட்டவர் சுதா சந்திரன். நடனத்திற்கு கால்கள் தான் முக்கியம் என்ற மாயையை உடைத்து, மனம் நன்றாக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நடனமாட முடியும் என வாழும் உதாரணமாக இருக்கிறார்.

சுதா சந்திரன் 1965ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி மும்பையில் பிறந்தார். மும்பையில் பிறந்தாலும் இவரது பெற்றோரின் பூர்வீகம் தமிழகம்.

சுதா சந்திரனுக்கு மூன்று வயது இருக்கும்போது அவருக்குள் இருந்த நடனத் திறமையை அவரது பெற்றோர் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உரிய நடன வகுப்புகளுக்கு அவர் அனுப்பப்பட்டார்.

பின்னர் அரங்கேற்றம் முடித்த அவர், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடத் தொடங்கினார். சந்தோசமாகச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டது.

1981-ம் ஆண்டு புனிதயாத்திரை சென்றபோது எதிர்பாராதவிதமாக திருச்சி அருகே விபத்தில் சிக்கினார். அப்போது, அவரது வலதுகாலின் ஒருபகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஆனாலும், அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை, நடனத்தையும் விடவில்லை. ஜெய்ப்பூரில் செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு, தனது நடன நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்தார்.

முன்பைவிட, இன்னும் அதிக உத்வேகத்தோடு நடனம் ஆட ஆரம்பித்தார். கால் இல்லாமல் எப்படி நடனம் ஆட முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலாய் இருந்தது அவரது அதிரடி நடனம்.

இந்தியா மட்டுமின்றி நாடுகள் தாண்டியும் ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

நடனத்தின் மீது தீராக் காதல் கொண்டு, அதனை தீவிரமாகக் கற்று வந்த போதும், படிப்பையும் அவர் கைவிடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு, அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையிலேயே முடித்துக் கொண்டார்.

1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாகும் வாய்ப்பு சுதா சந்திரனுக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் 1986-ம் ஆண்டு நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டது.

மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் சுதா சந்திரன் பெற்றார். அந்த விருது கொடுத்த உத்வேகத்தில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி என பல மொழிப் படங்களில் அவர் நடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சுதா சந்திரனின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியது. அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் சீரியல்களில் அவர் நடித்தார். நடிப்பு, டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர் என 30 வருடங்களுக்கும் மேலாக அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது. இவரின் வாழ்க்கையை பார்க்கும் போது தன் நம்பிக்கையை இழந்த அனைவருக்கும் புதிய உத்வேகம் கிடைக்கும்.

முயற்சி மற்றுமே வாழ்க்கையை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்பதற்கு இவரின் வாழ்க்கையை தவிர வேறு என்ன எடுத்து காட்டு வேண்டும்.

35271 total views
loading...