நடிகர் பாக்கியராஜை கன்னத்தில் அடித்த நபர்.. சிறுவயது காதலின் கதையை பற்றி மேடையிலேயே கூறிய தகவல்..!

Report
173Shares

நடிகர் பாக்கியராஜ் திரைப்பட விழா ஒன்றில், சிறுவயது காதலை பற்றி பேசியுள்ளார். அதில், காதல் கடிதம் கொடுக்க சென்றபோது, அப்பெண்ணின் அண்ணன் அங்கு வந்ததும், அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அதன் பின்னர், அந்த பெண்ணின் அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது, நான் என்னை பற்றி கூறவே தான் வந்திருக்கிறான் என்று பயத்தில் இருந்தேன்.

ஆனால், அவர் அந்த காதல் கடிதம் பற்றி எதுவும் பேசவில்லை. மேலும் அப்பறம் என் அண்ணன் என்னை பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு போக சொன்னார்.

நானும் கடைக்கு சென்றுவிட்டு வீடு, திரும்பிய போது அந்த பெண்ணின் அண்ணன் வீட்டில் இல்லை. ஆனால் என் அண்ணன் மிகவும் கோபத்துடன் என்னை பார்த்தார்.

நான் கொடுத்த கடிதம் பற்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாரா என நினைத்தேன். ஆனால் அவர் அதை கூறவில்லை. என் அண்ணன் என்னை வேகமாக கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இனிமேல் அந்த பக்கம் போனால் அவ்வளவு தான் என கடுமையாக என்னை திட்டினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது அவர் வேற மாதிரி என்னை போட்டுக்கொடுத்துள்ளார் என்றும் இனிமேல் அவர் தங்கை இருக்கும் பக்கமே போக கூடாது என்றும் நினைத்துகொண்டேன். என வெளிப்படையாக பாக்கியராஜ் மேடையிலேயே கூறினார்.

5181 total views
loading...