விருதை திருப்பி அனுப்பிய பிக் பாஸ் சேரன்! சரியான செருப்படி என ஆதரவாக ரசிகர்கள்

Report
1376Shares

விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம் ஆனால் என்னை வீழ்த்தமுடியாது என்று கூறி பிரபல ஊடகம் கொடுத்த விருதை பிக் பாஸ் சேரன் திருப்பி அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,

தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.

சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல.. சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை..
விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இனி அவார்ட் கொடுக்கும் போதோ இல்லை திரைபடத்தை விமர்சனம் செய்யும் போதோ சுயமாக சிந்தித்து பாகுபாடின்றி அனைத்து கலைஞர்களின் திரைபடங்களையும் விமர்சனம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டும் இல்லை, இது சரியான செருப்படி என்றும் சேரனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

58269 total views