பல கோடி மதிப்புள்ள பூர்வீக சொத்தையே தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி! ஏன் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
512Shares

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சொந்தமான பூர்வீக வீட்டினை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்க உள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நெல்லூரில் சொந்த வீடு ஒன்று உள்ளது.

இவர் சொந்த துறையில் பிரபலமான உடன் இவர் சென்னையிலேயே தங்கி விட்டார். நெல்லூரில் இருக்கும் அவருடைய சொந்த வீடு பூட்டியே கிடந்ததாக கூறப்படுகிறது.

அது தனது பரம்பரை சொத்து என்பதால் எஸ்பி பாலாசுப்ரமணியம் அதை விற்க மனமில்லாமல் தற்போது அதை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கி உள்ளார்.

அவர் தனது வீட்டை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், அந்த வீட்டில் காஞ்சி மடம் சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை மனமார பாராட்டி வருகின்றனர்.

you may like this...

20459 total views