இந்த நடிகர் நான் 14 வயதில் இருந்தபோது துரத்தி துரத்தி காதலித்தார்.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்..!

Report
796Shares

நடிகை வனிதா விஜயகுமாரை பற்றி தெரியாதவர்களே தற்போது இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறு வயது குழந்தைகளுக்கு கூட வனிதா என்றால் தெரியும்.

இவர், இரண்டு திருமணம் செய்தும் விவகாரத்து செய்து, தன் குழந்தைகள் தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல், cook with comali என்ற பல நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தன்னுடைய இளம் வயதில் நடந்த காதல் அனுபவத்தை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், எனக்கு என்னுடைய அதில் 14 வயதில் நான்காவது படிக்கும் குட்டிப்பையன் துரத்தி துரத்தி என்ன லவ் பண்ணான். அப்போ அவன் சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. எங்க வீட்டில் இதை பற்றி சொன்னதும் அனைவரும் ஆடிப் போயிட்டாங்க.

இளமையான, துறுதுறுப்பான பையன் அவன். என்றும் 16 வயது தான் அவனுக்கு, இப்போ சினிமா துறையில் தான் இருக்கிறான். அவன் யார் என்று நான் சொல்ல விரும்பலை. எனக்கு என்று முதல் காதல் அது தான்.

பிறகு பல வருடங்கள் கழித்து நாங்கள் நண்பர்களாக மாறிட்டோம். அது காதல் என்று சொல்ல முடியாது. பப்பி லவ் என்று சொல்லலாம். அது ஒருவிதமான கிரஷ். அவன் சினிமா துறையில் நல்ல பிரபலம் ஆயிட்டாரு. காதல் ஒரு அழகானது என்று கூறினார்.

இப்படி தன் காதல் குறித்து வனிதா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த சிறுவயதில் வனிதாவை காதலித்தது யார் என ஒவ்வொரு நடிகரின் பெயரையும் கூறி, பதிவிட்டு வருகிறார்கள்.

you may like this

28303 total views