மகனுக்காக யோசித்த பெயரை பிறந்த மகளுக்கு வைத்த சினேகா பிரசன்னா.. என்ன பெயர் தெரியுமா? குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்

Report
594Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.

சினோகாவிற்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை ஒரு வித்தியாசமாக கணவர் பிரசன்னா புகைப்படத்தை பதிவிட்டு ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இவர்களுக்கு விஹான் என்ற ஒரு மகனும் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா நேர்காணலில் பேசியிருப்பதாவது, தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம்.

அதனால், நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால், முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை.

எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் பிரசன்னா.