கொரோனா வைரஸை பரப்பும் நோக்கோடு அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சீனர்!

Report
218Shares

சீனாவில் நபர் ஒருவர் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கத்தோடு செயற்பட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மிக தீவிரமாக மனித உயிர்களை பலி வாங்கும் கொரோனா வைரஸை தற்போது வரை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து கண்டறியப்படவில்லை.

சீனாவில் நோயால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் மற்றவர்களுக்கு அதை பரப்பும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிசிடிவி காட்சியில் உணவை வாடிக்கையாளரிடம் வழங்க லிப்டில் செல்லும் டெலிவரி மேன் அதில் எச்சில் துப்புகிறார்.

இச்சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை. எனினும் குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

7887 total views