மேடையில் பாடகி ஸ்ரேயா கோஷலின் காலில் விழுந்த பாட்டி.. அடுத்த நொடியே அவர் செய்த காரியம்.. இணையத்தில் வைரல்!

Report
315Shares

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில், தனது மெல்லிய, மெய் மறக்க வைக்கும் குரலால் எக்கச்சக்கமான பாடல்களை பாடியவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் எவருமே இல்லை.

அந்த அளவிற்கு இவரின் குரலின் மீது ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. பாடகி ஸ்ரேயா கோஷல் பாலிவுட் மற்றும் கன்னட பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆன்மீக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அங்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர் ஸ்ரேயா கோஷலுக்கு மாலை அறிவித்தார். அதனை அவர் ஏற்றுக் கொண்ட நிலையில் திடீரென அந்த மூதாட்டி பாடகியின் காலில் விழ முயற்சி செய்துள்ளார்.

உடனே, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரேயா கோஷல் உடனே குனிந்தவாறு பின்னால் ஓடிச் சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் அங்கு வந்து அந்த மூதாட்டியை கட்டி அணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

9616 total views