முகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி!

Report
690Shares

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் தான் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். இவரின் பிரகாஷ் ராவ்(52) நேற்று மாலை 6 20 மணிக்கு 27-ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார்.

தந்தை மாரடைப்பால் காலமானது பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி முகேனின் ரசிகர்களை பெரும் சோகத்திலேயே ஆழ்த்தியது.

இந்நிலையில் முகென் ராவ் தந்தையின் இறுதி சடங்கின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தந்தையின் உடலை கண்ணீருடன் சுமந்து செல்லும் முகேனுக்கு ரசிகர்கள் பலரும் அனுதாபங்களை கூறி வருகின்றனர்.