கைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்

Report
440Shares

பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது கொமடித்தனமான பேச்சுத்திறமையினரால் அனைவரையும் சிரிக்கவைத்து ரசிகர்கள் கூட்டத்தினை வைத்திருக்கின்றார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து தனது குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். ஏற்கெனவே இந்நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த இவர் குழந்தை பிறந்ததால் சில வாரங்கள் வராமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் குழந்தையினை கொஞ்சிய நிலையில், வனிதா நிஷாவிற்கு குழந்தை சம்பந்தமாக அட்வைஸ் செய்துள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

19248 total views