வெளிநாட்டு ஹோட்டலில் தமிழ் நடிகர் ஜீவா செய்த செயல்! இறுதியில் இப்படி ஒரு சிக்கலா?

Report
131Shares

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் “83” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த்தாக ஜீவா நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிடும் விழாவில் நடிகர் ஜீவா இந்த படத்தின் போது நிகழ்ந்த அனுபவங்களை பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியது,

விஷ்ணு மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது. முதலில் ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொல்லும் போது நான் அதிர்ச்சியடைந்தேன்.

ஸ்காட்லாந்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முதல் நாளில் எனக்கு ஒரு வினோதமான சூழ்நிலை ஏற்பட்டது என்று சொல்லலாம்.

அது முதல் நாள் படப்பிடிப்பின் போது நான் ஸ்ரீகாந்த் போல புகைப்பிடிக்க பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. அப்போது தற்செயலாக புகை அலாரம் ஹோட்டல் முழுவதும் அடித்தது. பின் நாங்கள் அனைவரும் ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது என்னால் மறக்க முடியாது. நடிகர் ரன்வீர் சிங்கை பத்தி சொல்லவே வேண்டாம் உங்கள் எல்லோருக்குமே தெரியும்.

அந்த அளவிற்கு திறமை மிக்க மனிதர். இவருடைய பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும், மிகப்பெரிய நடிகர். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதன் மூலம் நான் நாடு முழுவதும் நண்பர்களை பெற்று உள்ளேன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

5531 total views