பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு சம்பளம் இவ்வளவு தானா? நம்பவே மாட்டீங்க

Report
505Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

குறித்த சீரியல் அண்ணன், தம்பியின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக எடுத்து வருகின்றனர். இதில் மூன்றாவது ஜோடியாக நடிக்கும் கதிர், முல்லையின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.

ஆனால் இவர்கள் சீரியலில் சிறந்த ஜோடியாக இருந்தாலும், ரியலில் இவர்கள் எலியும் பூனையாக இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியது.

இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என்றும் மக்களின் ஆசையினைக் கூட நிறைவேற்றவில்லை என்றும் பல புகார் எழுந்தன.

இந்நிலையில் இருவரும் இணைந்து பேட்டி அளித்துள்ளனர். அதில் தங்களுக்குள் எந்தவொரு பிரச்சினை இல்லை என்று கூறியது மட்டுமின்றி இருவரும் சேர்ந்து நடனமும் ஆடினார்கள்.

சமீபத்தில் நேர்காணலின் போது குமரனிடம், உங்களது சம்பளம் எவ்வளவு என்ற கேள்வியினைக் கேட்ட பொழுது, எதையும் மறைக்காமல் மிகவும் பளிச்சென்று வெளிப்படையாக பதிலை கூறியுள்ளார். அவரது சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் தானாம்....

15956 total views
loading...