படுத்தபடுக்கையாக்கிய சர்க்கரை நோய்... மகனால் ஏற்பட்ட மிகப்பெரிய கடன்! பிரபல பாடகரின் கடைசி நிலை என்ன தெரியுமா?

Report
548Shares

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும். மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் டெல்லி டு மெட்ராஸ் படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனாலும் அவருக்கு பெரிதாக அப்போது வாய்ப்புகள் இல்லை. இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார்.

தான் இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில். கவியரசு கண்ணதாசனின் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ என்ற அந்தப் பாடல் ஒரே இரவில் வாசுதேவனை முன்னணிப் பாடகராக்கியது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன்.

முதல்வசந்தம், ஒரு கைதியின் டைரி, ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். புதிய பாடகர்களின் வரவு மற்றும் அவரது உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாக அவரால் பாட முடியாமல் அவஸ்தைப் பட்டு வந்தார்.

மகன் யுகேந்திரனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்த அவர், மகனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சொந்தமாக படமெடுக்க முயற்சி செய்தார். தான் பாடி சம்பாதித்த அனைத்து பணங்கள் மட்டுமின்றி வட்டிக்கும் பணத்தினை கடன் வாங்கி படமெடுத்தார்.

ஆனால் குறித்த படம் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தியதோடு, காலில் ஏற்பட்ட சிறு புண் இறுதியில் நீரிழிவு நோயில் கொண்டு சென்றுவிட்டது. காலில் புண் ஆறாமல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனுடன் பக்கவாதமும் ஏற்பட்ட நிலையில், கலங்கிய நிலையில் படுத்த படுக்கையாகிய மலேசியா வாசுதேவன், பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு இம்மண்ணை விட்டு விடைபெற்றார். அந்த சிம்மக்குரல் பாடகர். பூங்காற்று திரும்புமா..?