நடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Report
591Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் போதே சினேகா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினேகா.

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னா, தனது ட்விட்டர் பதிவில், தை மகள் வந்தாள் என்றும் தனது மகளின் வருகையைக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

Its a girl❤❤

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on