விஜய்யை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்!.. என் கணவர் அடித்துவிட்டார்.. உண்மையை போட்டுடைத்த சீரியல் நடிகை

Report
644Shares

பிரபல சீரியல் நடிகையான செந்தில்குமாரி சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார்.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மாமியாராக நடித்து வந்தார். தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

இந்நிலையில் தன்னுடைய இளம்வயதில் நடந்த சுவாரசியமான விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில், ”நான் திருமணம் ஆன பின்பு தான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்". ஏன் என்றால், நான் அவரது தீவிர ரசிகை. அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை.

அதன் பின் பேசிய அவர், திருப்பாச்சி படத்தில் என்னுடைய சகோதரி மீனல் சிறு வேடத்தில் நடித்தார்.

அதனால், விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால் குஷியான நான், அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன்.

அப்போது, என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.