கோடீஸ்வரியான கெளசல்யா சந்தித்த முக்கிய பிரபலங்கள்.. யார் தெரியுமா? வைரல் புகைப்படம் இதோ..!

Report
339Shares

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் 1 கோடி ரூபாயை வென்ற கௌசல்யா தான்.

இதில், இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் யாரும் இதுவரை முழுமையாக 30 கேள்விகளுக்கும் பதில் அளித்து 1 கோடி ரூபாயை வென்றது இல்லை. அந்த சாதனையை முறியடித்துள்ளார், மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான கௌசல்யா என்பவர்.

இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. கௌசல்யாவுக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உடையவர், மேலும் அதிர்வுகள், உதடு வாசிப்பு மற்றும் கணவரின் உதவியுடன் தொடர்பு கொள்கிறார்.

வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்ட கௌசல்யா, தனது பி.எஸ்சி, எம்.எஸ்சிக்கு பின்னர் எம்பிஏ பட்டம் முடித்து பல்கலைக்கழக முதலிடம் பெற்று சவாலான கல்வி பயணத்தின் மூலம் இவரை கண்டிருந்தார் மாவட்ட நீதிபதி. மதுரையில், முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் கெளசல்யாவின் வெற்றிக்கு பிறகு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, கௌசல்யா தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியையும் உலக நாயகன் கமல் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.