கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்ணின் ஒரே ஆசை.. கண்கலங்கி போன பார்வையாளர்கள்..!

Report
153Shares

இந்தியாவில் உள்ள அத்துணை மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான்.

பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பிரபல ரிவியில் கடந்த டிசம்பர் 13ம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.

பெண்கள் மட்டுமே விளையாடும் இப்போட்டியில், பல பெண்கள் கலந்துகொண்டு பல லட்சங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையை நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா வாய் பேசமுடியாமல் காது கேட்காமல் இருந்து வருபவர். இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று, ஏற்கனவே கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கு பதிலளித்து ஒரு கோடி ரூபாயை வென்று இருந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது வெளியான ப்ரோமோவில், அவரிடம் ராதிகா உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறது. கடவுளிடம் என்ன கேட்பீர்கள் என கேட்டதற்கு, கெளசல்யா எனக்கு எந்த ஆசையும் இல்லை எல்லோரும் நல்லா இருக்கணும் வேண்டிப்பேன்.

எனவும் அதற்கு பிறகு எனக்கு காது கேட்டால் போதும், எனது மகனின் குரலை கேட்கவேண்டும் என்ற ஆசையும் உள்ளது கூறி, ஒரு நிமிடம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

4910 total views