எல்லோரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகை மனோரமா வாழ்க்கையில் இறுதி வரை இவ்வளவு சோகமா? கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை

Report
245Shares

நடிகை மனோரமாவின் இறப்பு இப்போது வரை கூட யாராலுமே ஈடு கட்ட முடியாது.

1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளார். இவரின் வாழ்க்கை ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இன்று வரை முன்னுதாரனமாகவே உள்ளது.

அவரின் சாதனை பயணம் என்றும் ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷமே.

நடிகை மனோரமா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார் குடியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கோபி சாந்தா.

12 வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.மனோரமா அவர்கள் முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

இவருக்கு தமிழ் மொழி மட்டும் தான் பேச தெரியும். இருந்தாலும் நடிகை மனோரமா அவர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்து வந்தார்.

நடிகை மனோரமா சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து உள்ளார்.

இவருடன் நாடகங்களில் நடித்த எம்.எஸ் ராமநாதன் என்பதை நடிகை மனோரமா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். மகன் பிறந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனோரமா அவர்கள் 1966 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று காதல் கணவரை பிரிந்தார்.

மனோரமா கணவரும் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். பிறகு தனிமையில் ஒரு பெண்ணாக போராடி வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வந்தார். தன் மகனையும் வளர்த்தார்.

இதேவேளை, நடிகை மனோரமா 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் இறந்தார். அவர் மரணித்து பல வருடங்கள் கடந்திருந்தாலும் இன்றும் ரசிகர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.