ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன?

Report
638Shares

பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பிரபல ரிவியில் கடந்த டிசம்பர் 13ம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.

பெண்கள் மட்டுமே விளையாடும் இப்போட்டியில், பல பெண்கள் கலந்துகொண்டு பல லட்சங்களை வெற்றி பெற்று சென்றுள்ளனர்.

இந்நிலையில் முதன்முதலாக மாற்றுத்திறனாளி பெண்ணான மதுரையைச் சேர்ந்த கவுசல்யா, கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறி 1 கோடி ரூபாயை பரிசாக பெற்றுள்ளார்.

இவர் மதுரை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். காது கேட்காது, வாய் பேச முடியாது. குறித்த பெண்ணிற்கு குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வர வேண்டும் என்பதே ஆசையாம்.

தனது சைகை மொழி மற்றும் திறமையினால் கோடீஸ்வரி விளையாட்டிற்கு விளையாட வந்த கவுசல்யா தற்போது பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுசல்யாவின் வெற்றியினைப் பாராட்டிய ராதிகா, 15ம் கேள்விக்கு கவுசல்யா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இதற்கு ராதிகா சரத்குமார் ஊக்கம் கொடுத்ததாலேயே இவ்வாறான வெற்றியை பெற்றுள்ளாராம். குறித்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

19141 total views
loading...