மன்னிப்பா... கேட்கமுடியாது! ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி எஸ்கேப்பான ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
315Shares

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற டேக் வைரலாகி வருகிறது.

பெரியார் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.

ரஜினியின் இந்த கருத்தை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற டேக் வைரலாகி வருகிறது. ஆனால் இதனை மீம்ஸ் கிரியோட்டர்கள் கையில் எடுத்துக்கொண்டு தங்களது பாஷையில் கலாய்த்து தள்ளுகின்றனர்.