ஆபாசமாக பேசிய அஜித் ரசிகர்களை தெறிக்க விட்ட கஸ்தூரி... களேபரமாகிய டுவிட்டர்!

Report
93Shares

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மிக விரைவில் வெளியேறிய போட்டியாளர் என்றால் அது நடிகை கஸ்தூரி தான். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனைக் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் டுவிட்டரில் ஆபாசமாக பேசியவர்களை நடிகை கஸ்தூரி கடுமையாக கண்டித்து டுவிட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளதால், அஜித் ரசிகர்களுக்கும், கஸ்தூரிக்கும் இடையே பாரிய சண்டை நடந்து வருகின்றது.

ரசிகர் ஆபாசமாக பேசியதை காப்பி செய்து தனது பக்கத்தில் போட்டு அதற்கு பதிலளித்துள்ளார். “மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. #dirtyAjithFans” என்று டுவிட் செய்தார்.

இவ்வாறு கஸ்தூரியின் பதிவினை அவதானித்த அஜித் ரசிகர்கள், யாரோ சில நபர் அஜித் ரசிகர் என்று பெயரை வைத்துக்கொண்டு ஆபாசமாக பேசியதற்கு ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் குறித்து பேசியுள்ளதால் கடும் கோபத்தில் இருப்பதோடு, #DirtyKasthuriAunty என்ற ஹேஷ் டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு கோபமடைந்த கஸ்தூரி, “ #dirtyajithfan டர்டி அஜித் ரசிகர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். டுவிட்டரில் பாலியல் தாக்குதல், நெகட்டிவ் டேகிங் செய்வது இது தான் அவர்களின் ஒரே வேலையா? தவறு செய்பவர்களை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக நீங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு வசைபாடுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு பிரயோஜனம் இல்லாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள். #தமிழகத்தின்_தலயெழுத்து #தலவலி” என்று டுவிட் செய்துள்ளார்.

ஆக மொத்தம் கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் சில மணி நேரமாக ஏற்பட்ட சண்டையால் டுவிட்டரே களேபரமாக காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4038 total views