ரெளடி பேபி பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட நடிகை சாயீஷா.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..!

Report
712Shares

வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை சாயீஷா. அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த இவர் கஜினிகாந்த் பட்டத்தின்போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காத இவர் இரண்டு கன்னட படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் - சாய்பல்லவி நடனத்தில் வெளியான ரௌடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த பாடலுக்கு தற்போது சாயீஷா மரண ஆட்டம் ஆடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். தற்போது இந்த நடனம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

loading...