இலங்கையில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் நுழைந்த யானை.. அதிர்ந்துபோன வேலையாட்கள்.. வைரல் காட்சி.!

Report
165Shares

இலங்கையில் ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்த யானை ஒன்று, அங்கு சாவகாசமாக அங்கு சுற்றி பார்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனவிலங்குகள் வாழும் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை கட்டப்படுவதால் வேற வழியில்லாமல் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதுண்டு. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று கேள்விப்பட்டிருப்போம். தற்போது இலங்கையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதில், யானை ஒன்று ஸ்டார் ஹோட்டலுக்குள் புகுந்து நிதானமாக சுற்றிப்பார்க்கிறது. ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது.

அங்கிருந்த சிறிய விளக்கு கம்பத்தை யானை தொட்டு பார்க்கும்போது அது கீழே விழுந்துவிட, அதை எடுக்க முயன்று முடியாததால் அங்கேயே விட்டு செல்கிறது.

அதைதொடர்ந்து அங்குள்ள ஜன்னல் வழியாக நகரை ரசித்து விட்டு, அந்த யானை அங்கிருந்து மெதுவாக வெளியேறுகிறது. யானையை யாரும் எந்த தொந்தரவும் செய்யாததால் அங்கிருந்து அமைதியாக வெளியேறிவிட்டது.

8087 total views