இதற்குப் பின்பு தான் புடவைக் கட்ட தொடங்கினேன்! ரகசியத்தைக் கூறிய பேபி அனிகா

Report
140Shares

மலையாளம், தமிழ் என மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களோடு நடிப்பில் கொடிகட்டி பறக்கும் நடிகையாக உள்ளார் நடிகை அனிகா.

தற்போது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஜெயலலிதாவாக நடத்திய போட்டோ ஷூட் இணையத்தளத்தில் வைரலானதையடுத்து, இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அனிகா.

குறித்த பேட்டியில் புடவை அணிந்த அந்த முதல் தருணம் குறித்து பேசியுள்ளார். குயின் சீரிஸில் தான் முதன் முதலில் புடவை கட்டினேன் என்றும் ஆரம்பத்தில் புடவை அணிய பிடிக்கவுமில்லை. மற்ற உடைகளை அணிவது போன்ற வசதி இதில் இல்லை என்றே கூறிக்கொண்டிருந்தேன்.

பின்பு, திரையில் புடவையில் என்னைப் பார்த்த பிறகு எனக்கே ரொம்ப அழகாகத் தோன்றியது. அதனால் இப்போதெல்லாம் புடவை உடுத்த தொடங்கிவிட்டதாகவும், மேலும் எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதாக அஜித்தின் ரீல் மகள் அனிகா கூறியுள்ளார்.

loading...