மீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம்! ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்

Report
302Shares

சின்னத்திரையில் ஈஸ்வர்- மகாலட்சுமி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் ஜெயஸ்ரீ.

தற்போது அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கான பின்னணி காரணம் குறித்து தெரியவந்துள்ளது.

ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் கைதான ஈஸ்வர் சில நாட்களில் வெளியே வர, ஜெயில்ல இருந்து வந்துட்டேன், இனிமேல உன்னால எதுவும் செய்ய முடியாது என கேலி செய்திருக்கிறார்.

அத்துடன் இவர்களுக்கு ஆதரவாக பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மீடியாவிடம் எதையும் பேசக்கூடாது என ஜெயஸ்ரீயை மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயஸ்ரீ-யை ஈஸ்வருக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து பணத்தை தரும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

இதில் நிலையை மேலும் மோசமாக தேவதையைக் கண்டேன் தொடரின் ஷீட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வந்துள்ளது.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ஜெயஸ்ரீ, தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார், சிறிது நேரம் தாமதமாக சென்றிருந்தாலும் அவரை காப்பாற்றியிருக்க முடியாது என ஜெயஸ்ரீயின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.