75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..!

Report
391Shares

75 வயது நடிகர் ஒருவர், 49 வயதான சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கமொழி திரைத்துறையில் பிரபல நடிகர் திபாங்கர் தே. 75 வயதான இவர் 49 வயதான டோலோன் என்ற நடிகையுடன் லிவிங் டுகெதர் உறவில் சில ஆண்டுகளாக இருந்தார்கள்.

தற்போது அவர்கள் இருவரும் மிகவும் சிம்பிளாக நேற்று திருமணம் செய்து கொன்றார்கள். திருமணம் முடிந்த கையோடு ஒரு பெரும் சோகம் நடந்துள்ளது. திபாங்கர் தேவிற்கு திடீரென இன்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் முடிந்த மறுநாளே இப்படி மருத்துவமனையில் இருப்பதை கண்டு உறவினர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.