தற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்மாவிடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..!

Report
189Shares

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சின்னத்திரை நடிகையும், நடிகர் ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ அவரது, கணவர் மீது வேறு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னையும் தன் மகளையும் தாக்கியதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீ மீது பல புகார்களை கூறிக் கொண்டே சென்றார்.

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவரது நெருங்கிய தோழியான ரேஷ்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதனை ரேஷ்மா ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார்.

அதில், நான் ஏமாந்து விட்டேன். என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. என்னை மன்னித்துவிடு.. ரேஷ்மா நீ எனக்கு மிகவும் நல்ல தோழியாக இருந்திருக்கிறாய் என்று அந்த மெசேஜில் அவர் பேசி இருந்தார். இதை கேட்ட உடனேயே ரேஷ்மா ஜெயஸ்ரீக்கு போன் செய்து பேசியதாக தெரிவித்திருக்கிறார்.

அப்போதுதான் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேரில் சென்று பார்த்த ரேஷ்மா ரேஷ்மாவிடம் ஜெயஸ்ரீ தொடர்ந்து கூறியதாவது, எனது மகளை நன்றாக பார்த்துக்கொள் என்று மட்டுமே சொல்லிக்கொண்டே இருந்ததாக ரேஷ்மா கூறியுள்ளார்.