ஒரே ஒரு புகைப்படத்தினைப் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி...! இதற்கு பதில் வேறயாம்

Report
146Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, பிரபல ரிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பல ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தவர் தான் ஜுலி.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜுலி பதிவிடும் புகைப்படத்தினை நெட்டிசன்கள் பயங்கரமாக வச்சி செய்கின்றனர் என்றே கூறலாம்.

காணும் பொங்கலான நேற்று ஜுலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோஷம் போடுவது போன்ற புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் உங்களை வீர தமிழச்சி என நம்பி ஏமாந்த நாள் இன்று என்று தனது கருத்துக்களை தாறுமாறாக பதிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி உங்களை தமிழ் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம் என்று கண்டபடி பேசிய நெட்டிசன்களுக்கு ஜுலி, நண்பா உண்மை ஒருநாள் தெரியும். அப்பொழுது இவ்வாறு கூற மாட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

6763 total views