ரசிகர்களுடன் வானில் பறந்த லொஸ்லியா... தீயாய் பரவும் காட்சி

Report
134Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவருக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகெங்கிலும் இருந்து பலர் ஆதரவு கொடுத்த போதிலும், ஓட்டுகள் சற்று குறைவாக கிடைத்ததால் இவரால் பிக்பாஸ் பட்டத்தை பெறமுடியாமல் போனது.

பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தவறவிட்டாலும், ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். இவர் எங்கு சென்றாலும் அவருடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காகவே ஒரு கூட்டம் கூடிக்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை லாஸ்லியா சற்று வித்தியாசமாக வானின் பறந்தபடி கொண்டாடியுள்ளார்.

அதாவது, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் நடந்த ஹாட் பலூன் பறக்கவிடும் போட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லாஸ்லியா, போட்டியில் கலந்து கொண்டவர்களுடன் ஹாட் பலூனில் வானத்தில் பறந்தபடி பொங்கல் வாழ்த்துக்கூறி, பொங்கலை கொண்டாடியுள்ளார். தற்போது இதுகுறித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

6281 total views