சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் நடிகர் வையாபுரி என்ன வேலை செய்தார் தெரியுமா? அவருக்கு இவ்வளவு அழகான மகளா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
290Shares

சினிமாவில் அனைவராலும் திடீர் என்று உச்சம் தொட்டுவிட முடியாது. சில தோல்விகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் நடிகர் வையாபுரியின் வாழ்க்கை.

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் காமெடி நடிகர் வையாபுரி எக்மோர் வசந்தபவன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்துள்ளார். மேலும், திருமண விழாக்களில் சமையல் வேலைக்கு செல்லலும் வேலைகளும் செய்து வந்துள்ளார்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில் போராடி அவருக்கு என்ற ஒரு தனி இடத்தினை சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிடித்திருந்தார்.

வையாபுரி 1993ல் வெளியான உடன்பிறப்பு என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால், சிலர் பாரதிராஜாவினி கருத்தம்மா தான் இவரது அறிமுக படம் என்கிறார்கள்.

தொடர்ந்து இவர் செல்லக்கண்ணு, அவ்வை சண்முகி போன்ற பல படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா என்ற படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால், பிக் பாஸ் முதல் சீசனில் பங்கு பற்றியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம். ஒரு சில படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார்.

2001 ஆம் ஆண்டில் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.

தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் வையாபுரியின் மகளா இது என்று ஷாக்காகியுள்ளனர்.