நா.முத்துக்குமாரின் மகனா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் அவரின் முதல் கவிதை வரிகள்

Report
327Shares

கவிஞன் நா.முத்துக்குமார் நினைத்து நினைத்து பார்த்தாலும் நெருங்கி அருகில் வர முடியாத இடத்தில் சென்று விட்ட நவயுகக் கவிஞன்.

நா. முத்துக்குமாரின் இடம் யாராலும் நிரப்ப முடியாத இடமாகவே இன்றும் இருக்கிறது.

அவருடைய இடத்தை அவரின் உதிரத்தில் உருவெடுத்த அவரின் மகன் நிறைவேற்றுவார் என்ற ஆறுதலைத் அவரின் மகன் ஆதவன் எழுதியுள்ள பொங்கல் பண்டிக்கான கவிதை தந்திருக்கிறது.

7ம் வகுப்பு படிக்கும் ஆதவன், போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தமிழர்த் திருநாளிற்காக தனது எண்ணத்தில் வண்ணம் தீட்டியுள்ள கவிதை வரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆதவன் எழுதிய அந்த கவிதை இதோ..
"நீ உன் ஆணவத்தை அன்பில் எறி
இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி கோயிலில் இருக்கும்
தேரு பானையை செய்யத் தேவை சேறு வீ
ட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு
இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு
தமிழரின் பெருமை மண் வாசனை இந்த கவிதை என் யோசனை!"
உழவர்களை அண்ணாந்து பாரு உலகத்தில் அன்பை சேரு
அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு
உழவர்கள் நமது சொந்தம் இதை சொன்னது தமிழர் பந்தம் பொங்கல் இன்றும் என்றும் சொல்லும் இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு கரும்பை இரண்டாக வெட்டு
நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு சிப்பிக்குள் இருக்கும் முத்து
மாடு தமிழர்களின் சொத்து மாடு எங்கள் சாமி நீ உன் அன்பை இங்கு காமி!
உறவினர்கள் வந்தார்களா என்று பாரு
உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு
நீ அழகாகக் கோலம் போடு
உன் நல்ல உள்ளத்தோடு நீ உனக்குள் கடவுளைத் தேடு
இல்லையென்றால் நீ படுவாய் பாடு பெண்ணைக் கண்ணாகப் பாரு இல்லையென்றால் கிடைக்காது சோறு! இந்த கவிதைகள் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
loading...