பிக்பாஸ் வனிதாவின் மகனா இது? அன்று நீதிமன்றத்தில் காணப்பட்ட சிறுவன் இப்போ எப்படியிருக்கார்னு பாருங்க!

Report
683Shares

பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியவர் தான் வனிதா.

இவர் சொந்த வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லாருக்கும் எதிரியாகவே காணப்பட்டார். அதுமட்டுமின்றி பார்வையாளர்களும் இவர் மீது வெறுப்பாகவே இருந்தனர். அதன் பின்பு அவரது மகள்கள் உள்ளே வந்த தருணத்தில் அவரது தாய் பாசத்தினை அவதானித்த பார்வையாளர்கள் வனிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

நடிகையான இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவில் வெளிவந்துவிட்டார். நட்சத்திர தம்பதிகளாக மஞ்சுளா, விஜயகுமாரின் மகள் தான் வனிதா. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சில சீரியல்களில் நடித்து வருகின்றார்.

தற்போது வனிதா தனது மகனின் புகைப்படத்தினை நீண்ட ஆண்டுகளுக்குப் பின்பு வெளியிட்டுள்ளார். பிரபல நடிகரான ஆகாஷை காதலித்து 2000ம் ஆண்டு திருமணம் செய்து பின்பு 2005ம் ஆண்டில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.

பின்பு 2007ம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து 3 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற மகள் உள்ளனர். தற்போது மகள்கள் இருவரும் வனிதாவுடன் இருக்க மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது தந்தை ஆகாஷ் உடன் இருந்து வருகின்றார்.

கடந்த 2011ம் ஆண்டு மகனைத் தன்னுடன் அழைத்துச்செல்வதற்கு விமானநிலையத்தில் வைத்து வனிதாவின் பெற்றோருக்கும், வனிதாவிற்கும் பயங்கர சண்டை நிகழ்ந்தது. அத்தருணத்தில் சிறுவனான விஜய் ஸ்ரீஹரி கதறிய கதறல் ஒட்டுமொத்த மக்களையும் கலக்கமடைய வைத்தது. பின்பு விஜய் ஸ்ரீஹரி தனது தந்தை ஆகாஷ் உடனும், தாத்தா விஜயகுமாருடன் இருப்பதாக கூறியதையடுத்து அவர்களிடம் வளர்ந்து வருகின்றனர்.

அன்று நீதிமன்றத்தில் சிறுவனாக கதறிய வனிதாவின் மகன் தற்போது பல ஆண்டுகளுக்குப் பின்பு எப்படியிருக்கின்றார் என்பதை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

என்னதான் மகள்களுடன் வசித்து வந்தாலும் மகன் தன்னுடன் இல்லை என்பதை பலமுறை வனிதா கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினார். தற்போது புகைப்படத்தினை வெளியிட்டு, என்னுடைய தளபதி சூப்பர் ஸ்டார் தல உலகநாயகன் என்னுடைய வாழ்க்கை என்னுடைய விஜய் ஸ்ரீஹரி என்னுடைய அப்பாவை போலவே இருக்கிறார் அல்லவா என்று பதிவிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் விரைவில் மகனுடன் சேர்ந்துவிடுவீர்கள் என்று ஆறுதலையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

loading...