அரங்கத்தில் அப்பாவை நினைத்து கண்கலங்கிய செந்தில்... அதிர்ச்சியில் சக நடிகர்கள்!

Report
255Shares

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றவர் தான் செந்தில் குமார். இதில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஸ்ரீஜா.

சின்னத்திரையில் ஜோடியாக கலக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர். தற்போது செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலின் வெற்றிப் பயணம் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சீரியலில் செந்தில் மாயன், அரவிந்த் என்னும் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், இவரது தந்தையாக நடித்து வரும் நடிகர் ஒரு காலத்தில் வில்லனாக கலக்கியவர் ஆவார்.

தற்போது அப்பாவாக அவரது கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது உண்மையிலேயே அப்பாவாகத்தான் நினைப்பதாக செந்தில் கூறியுளளார்.

அதுமட்டுமின்றி 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இறந்துவிட்டதால், அவரைப் போன்று இருக்கும் இவரைத்தான் அப்பா என நினைக்கிறேன் என்று கண்கலங்கி அழுதுள்ளார்.

loading...