சேரனை தொடர்ந்து மதுமிதா வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் பெண் போட்டியாளர்..! வைரலாகும் புகைப்படம்

Report
126Shares

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 100 நாட்களை நிறைவு செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் கொமெடி நடிகை மதுமிதாவும் ஒருவர்.

இவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியின் சக போட்டியாளரான ரேஷ்மா மதுமிதாவை காண அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மதுமிதா அவருக்கு சமைத்து விருந்து அளித்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை ரேஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் சேரன் மதுமிதா வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.