பறிக்கப்பட்ட மீரா மிதுனின் வேலை.. மரண கலாய் கலாய்த்து வீடியோவை வெளியிட்ட நெட்டிசன்கள்..!

Report
110Shares

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்தே மீரா மிதுன் பல சர்ச்சையான விஷயங்களை பற்றி பேசுவதும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் என செய்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சீர்கெட்டுப்போயிருக்கும் தமிழ்நாட்டு அரசியலை தூக்கி நிறுத்தி, சுத்தம் செய்யப்போவதாக சமீபத்தில் சபதம் எடுத்தார் மீரா மிதுன். அவர் முதலில் ஒழிக்க நினைத்தது ஊழலை. அதற்காக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக சேர்ந்தார்.

அதன் பின் ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார்.

பிறகு மீரா மிதுனுக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என ஆராய்ந்த போது, பணம் கட்டினால் யார் வேண்டுமானாலும் அந்த அட்டையை வாங்கலாம் என தெரியவந்தது.

இந்தநிலையில் தான், பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லையாம்.

இதனால் தான், ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவியை பறித்து, அந்த ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்களும் கொஞ்சம் ஆட்டமா போட்ட என வறுத்தெடுத்து ட்ரோல் காட்சியினை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.

loading...