தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை சீதாவா இது?.. புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்

Report
139Shares

தெய்வம் தந்த வீடு சீரியலின் மூலம் அனைவரது மனதிலும் சீதா என்ற கதாபாத்திரத்தில் இன்றும் மறக்கமுடியாத நடிகை தான் மேக்னா.

கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு தொழிலதிபர் டோனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது முன்னனி சீரியல் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கின்றார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு மேக்னாவிற்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது மட்டுமின்றி, இதற்கு பின்பு அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம்.

தற்போது பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் ரோகிணியாக கலக்கி வருகின்றார். குறித்த சீரியல் தற்போது புதிய திருப்பத்துடன் சென்றுகொண்டிருப்பதால், இதில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மேக்னா வயதான பாட்டி வேடத்தில் நடிக்கின்றார். இந்த தோற்றத்தை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

6895 total views