பிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
761Shares

இயக்குனர் சேரன் இன்று 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பதால் அவருடைய கொண்டாட்டத்தில் பல பேர் சேரனுடைய பிறந்த நாளை மறந்து விட்டார்கள்.

எனினும், சேரனின் அழகிய குடும்பம் கேக் வெட்டி அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமா 90களில் சிறந்த இயக்குனராக சேரன் வளம் வந்தவர். ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

View this post on Instagram

Heartful thanks to Behind wood

A post shared by Cheran (@cherandirector) on

இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தான் சேரன் மீண்டும் மக்களிடையே மிகப் பிரபலமானர். தற்போது புதிய படம் ஒன்றை எடுக்க போவதாக அறிவித்திருந்தார். இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல ஊடகத்தினால் சேரனுக்கு சிறந்த Icon of Inspiration என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.