நடிகர் பிரபு தேவா வாழ்க்கையில் கடந்து சென்ற மிகப் பெரிய புயல்! பரிதாபமாக முடிந்த வாழ்க்கை... கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Report
826Shares

எவ்வளவு பெரிய பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையின் பின்னணியில் எப்படியும் ஒரு சோகம் மறைந்திருக்கும். இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை.

அந்த வகையில் நடிகர் பிரபு தேவாவின் வாழ்விலும் மிக பெரிய அவலம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.

பிரபுதேவாவின் மகன் விஷால் உடல் நலக்குறைவால் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

நடிகர் பிரபு தேவா படங்களில் பிசியாக நடித்து இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்வார். இப்படி நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது பிரபு தேவா வாழ்க்கையில் மிகப் பெரிய புயல் ஒன்று வந்தது.

விஷாலுக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பதாக தெரிய வந்தது. இதனால் பிரபு தேவாவின் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பின் தன் மகனின் இழப்பில் இருந்து பிரபு தேவாவை கொஞ்சம் கொஞ்சமாக திசை திருப்பியது அவருடைய வேலை தான்.

இதேவேளை, பிரபு தேவாவுக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

26986 total views
loading...